நாகப்பட்டினம்,மே.30-
திருமருகல் அருகே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பணி நிறைவு – பாராட்டு விழா நடந்தது. நீர்வளத்துறை காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் பணி நிறைவு பாராட்டு விழா திருமருகல் அடுத்த இடையாத்தங்குடி அபய வரத ஆஞ்சநேயர் கோவிலில் நடந்தது. விழாவிற்கு திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முனைவர் எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். காவிரி கோட்டம் செயற்பொறியாளர்கள் தஞ்சாவூர் எம்.இளங்கோ, மயிலாடுதுறை எஸ்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கண்காணிப்பு பொறியாளர் சி.திலீபன் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்தினார். உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் குடும்பத் தினர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து பணி கொண்டனர். முடிவில் பணி நிறைவு பெற்ற உதவி செயற்பொறியாளர் ரெ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *