மதநல்லிணக்கத்தை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே என் முதன்மையான நோக்கம் என, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் மோகன்குமார் பேட்டி…
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக, ஊடகவியலாளர் மோகன்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சன் டிவி, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஊடகங்களில், 13 ஆண்டுகளுக்கும் மேலாக முதுநிலை நிருபராக பணியாற்றிய மோகன்குமார், தற்போது “சிறுவாணி எக்ஸ்பிரஸ்” எனும் இணைய ஊடகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
ஊடகவியலாளராக மட்டுமின்றி, தன்னால் இயன்ற சமூக சேவைகளையும் செய்து வரும் சமூக ஆர்வலருமான மோகன்குமார் அவர்களை, பல்சயம நல்லுறவு இயக்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக, அந்த இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி நியமித்துள்ளார். மோகன்குமாரின் அனுபவம் மற்றும் சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பும், பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றும் என, பல்சய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது புதிய பொறுப்பு குறித்து மோகன்குமார் பேசும்போது, பன்மொழி கலாச்சாரம், பலதரப்பட்ட சமய வழிபாடுகளை கொண்ட நம் நாட்டிற்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அடையாளம் எனவும், அப்படிப்பட்ட
இம்மண்ணில் நல்லிணக்கச் சிந்தனைகளை விதைத்து, மனித நேயத்தை வளர்ப்பதே தனது முதன்மையான நோக்கம் எனவும் மோகன்குமார் தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், பல்வேறு சமயங்களுக்கிடையே சகோதரத்துவத்தை வளர்க்கவும் முழுவீச்சில் பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார் .
“சமாதானமே சுகவாழ்வு” என்ற அடிப்படையில், மத நல்லிணக்கத்தை நிலைநாட்ட, 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பல்சமய நல்லுறவு இயக்கத்திற்கு, தன்னை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்த “நல்லிணக்க செம்மல்” தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி அவர்களுக்கு மோகன்குமார் நன்றி தெரிவித்தார்.
கொள்கை பரப்புச் செயலாளர் என்பது பெரும் பொறுப்பு எனவும், சமூக பணியை விரிவுபடுத்த இது ஒரு பெரும் நல்வாய்ப்பு எனவும் தெரிவித்தார். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு செல்வேன் எனவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைக்க மத நல்லிணக்கம் மலர, பல்சமய நல்வரவு இயக்கத்தின் கொள்கை வழி நின்று அயராது பாடுபடுவேன் எனவும் மோகன்குமார் தெரிவித்தார்.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட ஊடகவியலாளர் மோகன்குமார் அவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில், பல்வேறு சமயத் தலைவர்களுடன் இணைந்து மத நல்லிணக்கப் பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் சமூக சேவைப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதற்கான பணிகளில் மோகன்குமார் ஈடுபட உள்ளார்.