துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம்

துறையூர் மே-30
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 29/05/2026 அன்று மாலை 3.30 மணியளவில் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் 2027ஆம் ஆண்டிற்க்கான மக்கள் தொகை கணக்கீட்டுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சுதந்திர இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, முதன் முதலாக டிஜிட்டல் முறையில் அலைபேசி செயலி மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 2026ஆகஸ்ட் மாதமும், இரண்டாவது கட்டமாக 2027 பிப்ரவரி மாதமும் நடைபெறுகிறது.


முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு ,இரண்டாவது கட்டமாக குடும்ப தலைவர், உறுப்பினர்கள், ஜாதி, மதம் தொழில் உள்ளிட்ட தரவுகள் அலைபேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


இதில் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் துறையூர், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *