திருவாரூர். மே.30

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமையில் வேலையின்மைக்கு எதிராக கரப்பான் பூச்சிகள் வேடமணிந்து பேரணி நடத்தினர்.

இப்பேரணியானது திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி திருவாரூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பிராதான கோரிக்கைகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து பேரணியில், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்தும்,

பல லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் ஒன்றிய அரசாங்கம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிட கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த பேரணியில் சிபிஎம் மாவட்டசெயலாளர் முருகையன் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்த் , மாவட்டசெயலாளர் பாலா , மாவட்ட துணை தலைவர் விஜய் , ஒன்றியசெயலாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *