மன்னார்குடி., மே.30

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக , கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் வேலையின்மை மற்றும் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆட்டோவை கயிறு கட்டி 1கிலோமீட்டர் தூரம் இழுத்துச்சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *