கோவையைச் சேர்ந்த கணேஷ் குமார் – கீதா தம்பதியரின் மகளான சன்விதா ஸ்ரீ, சிறு வயதிலேயே தமிழ் மொழியில் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
தனது ஆறு வயதிலேயே தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து உள்ளிட்ட மொத்தம் 247 தமிழ் எழுத்துக்களையும் மிகக் குறுகிய நேரத்தில் அடையாளம் கண்டு கூறி உலக சாதனை படைத்திருந்த சன்விதா ஸ்ரீ, தற்போது புதிய சாதனையாக லேப்டாப்பின் ஆங்கில விசைப்பலகையை பயன்படுத்தி தமிழ் மொழியின் அனைத்து 247 எழுத்துக்களையும் வெறும் 3 நிமிடங்களில் தட்டச்சு செய்து அசத்தியுள்ளார்.
இந்த அபார சாதனை ஏசியன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, கோவையில் நடைபெற்ற விழாவில் என்.என்.ஐ. நிறுவனம் சார்பில் வழங்கப்படும் “இந்தியன் ஸ்டார் ஐகான் விருது” சிறுமி சன்விதா ஸ்ரீக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விருதை ஷெரீப் வழங்கி சாதனை சிறுமியை பாராட்டினார் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இளம் தலைமுறையினரிடையே மொழிப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும் சன்விதாவின் சாதனை அமைந்துள்ளதாக விழாவில் பங்கேற்ற தமிழ் ஆர்வலர் தமிழ் மணிகண்டன்,அன்பொளி அறக்கட்டளை தலைவர் கார்த்திக் மற்றும் ஜாபேஷ் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.
அவரது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.