சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ்,நாகராஜ் ,கோபி,வினோத் உறவினரான இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் ,குன்றத்தார் வட்டம்,வரதராஜபுரம் கிராமத்தில் 1.12. ஏக்கர் நிலம் தந்தை மற்றும் தாத்தா வழி பூர்வீக சொத்து உள்ளது,
அந்த நிலத்தில் 2010 ம் ஆண்டு வரை நெல் மற்றும் சம்பங்கி பூ பயிர் செய்து வந்துள்ளனர்,பின்னர் தண்ணீர் பற்றாகுறையால் பயிர் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்,
இந்த நிலையில் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவர் போலியான ஆவணஙகளை தயாரித்து தனது சசோதரன் ராமசந்திரன் என்பவருக்கு செட்டில்மண்ட் ஆவண்த்தை தயாரித்துள்ளார்,
தனசேகரன் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் என்பதால் அப்போதிய கிராம நிர்வாக அலுவலரின் துணையோடு தனசேகரன் தனது சகோரதர் ராமசந்திரன் பெயரில் படப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மண்ட் ஆவணத்தை உருவாக்கியுள்ளது,
இது குறித்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு கடந்த ஆண்டு தெரியவந்த நிலையில் போலி பட்டாவை தயாரித்து நிலத்தை அபகரித்த தனசேகரன் , ராமசந்திரன் ஆவணத்தில் சாட்சி கையெழுத்திட்ட மற்றும் ஒரு சகோதரரான மனோகரன் ஆகியோரிடம் கேட்ட போது நிலத்தின் உரிமையாளகளை குடும்பத்துடன் கொலை செய்த்ய் விடுவதாக மிரட்டியதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர்,காவல் ஆணையர் , தாம்பரம் துணை ஆணையர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் நிலம் மோசடி குறித்து நிலத்தின் உரிமையார்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நிலம் குறித்து மனு அளித்தால்,புகார் அல்லது விசாரனை ஆஜராவது அல்லது வேறேனும் முயற்சித்தால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவதாக தனசேகரன் தரப்பினர் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்,
இந்த நிலையில் வழக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு மாற்றப்பட்டு விசாரணை செய்து அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து தனசேகரன் ராமசந்திரன் மற்றும் மனோகரன் மீது போலி ஆவணஙகள் உருவாக்குதல் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு ஏமாற்றுவது நிலத்தை அபகரிப்பு செய்வது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இதில் தற்பொழுது ராமச்சந்திரன் மட்டும் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்