திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா என்ற இரு குழந்தைகள் யோகாசன பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே நீண்டநேரம் ஆணிப்படுக்கையில் நிற்பது மற்றும் சிரசாசனம் செய்வதில் உலக சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.

பழனியருகே உள்ள பெத்த நாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகுலன் மற்றும் மேஷவர்ணிகா ஆகிய இருவரும் இணைந்து 4நிமிடம் 37 விநாடிகளில் 125யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தனர்.

இதற்கு முன்பாக சாதனையாக செய்யப்பட்ட நேரத்தை விட மிகக்குறைந்த நேரத்தில் 125யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்தது இதுவே ஆகும்.

உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்று இரு குழந்தைகளின் சாதனையையும் கண்காணித்து குழந்தைகளின் சாதனையை‌ பதிவு செய்தனர்.

5நியிடங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நான்கரை நிமிடங்களிலேயே உலக சாதனை செய்த இரு குழந்தைகளையும்,அவர்களுக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியரையும் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *