தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வைகாசி விசாக பெரும் திருவிழா நடைப்பெற்று வருகிறது அதனை முன்னிட்டு கழனிவாசல் இளைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரிய மாடு. கரிச்சான் மாடு. பூஞ்சிட்டு மாடு. கரிச்சான் குதிரை என நான்கு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு அதிசிறப்பான முறையில் நடந்தேறியது. இந்த மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் திரளான மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தய ரசிகர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன் .