தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 291 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

இதனைத் தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறையினர் சார்பில் 2.3.600. மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 9 மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூபாய் 94.500 மதிப்பிலான சக்கர நாற்காலி 6 நபர்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் தலா 15,000 வீதம் 5 முஸ்லிம் ஏழை மகளிர்களுக்கும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் தலா 15.000 வீதம் 5 கிறிஸ்துவ ஏழை மகளிர்களுக்கு சுய தொழில் தொடங்க காசோலைகள் என மொத்தம் ரூபாய் 4.48.100. மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 18 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் இரா வைத்தி நாதன்வழங்கினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப . ராஜகுமார் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் பொது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல் நிலம் மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தனித்துறை ஆட்சியர் கவிதா சா.
ப.தி. உதவி ஆணையர் பஞ்சாபகேசன் கலால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி அலுவலர் சுரேஷ் குமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஏ. எடிசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *