கம்பம் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை ரோட்டில் ஓடிய சாக்கடை நீர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திங்கட்கிழமை மாலை 3. மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை கனமழையாக சுமார் ஒரு மணிநேரம் வெளுத்து வாங்கியது இதனால் பொதுமக்கள் கோடை வெப்பம் தணிந்து கனமழையால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ந்த சுவாச காற்றை அனுபவித்தனர்

என்றாலும் கனமழையால் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் குலாலர் மண்டபம் அருகே மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது இந்த மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் அப்பகுதி முழுவதும் கடும் தூர்நாற்றம் வீசி அப்பகுதியை கடந்து செல்லும் பொது போக்குவரத்தான பஸ் மற்றும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகத்தை மூடிக்கொண்டு தூர் நாற்றத்தை தாங்க முடியாமல் சென்றனர்

இதனால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அளவுக்கு தூர் நாற்றம் கடுமையாக இருந்தது எனவே இந்த பகுதியில் சாக்கடைகளை சீரமைத்து தர கம்பம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *