C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2,05,532 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகரட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைசெல்வன் ஆகியோர் முன்னிலையில் கடலூர், திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேணுகோபாலபுரம் ஸ்ரீ வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மேலாக அரசு பள்ளி மாணவர்களும் கல்வி கற்றிட ஏதுவாக பள்ளி தொடக்க நாளன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கிடவும் மாணவர்களின் தேவைகேற்ப பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடலூர் மாவட்டத்திலுள்ள 1,435 அரசு பள்ளிகளில் பயிலும் 1,50,362 மாணவ, மாணவியர்களுக்கும், 282 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 55,170 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 1,717 பள்ளிகளில் பயிலும் 2,05,532 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் கல்வியே அடித்தளமாகும். இன்றைய மாணவர்களே நாளைய சமூதாயத்தை உருவாக்க கூடியவர்கள். எனவே மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அவர்களின் கல்வி பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
2026-27ஆம் கல்வியாண்டில் தொடக்க நாளிலேயே கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி கல்வி கற்பது மட்டுமின்றி நல்ல ஒழுக்கமுடைய மாணவர்களாகவும் திகழ வேண்டும். கற்றல் திறன் மட்டுமின்றி, பிற திறன்களையும் வளர்த்து கொண்டு, அனைத்து மாணவர்களும் தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிஷன் குமார் முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், மாமன்ற உறுப்பினர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.