திருவாரூர் விஜயபுரம் ஐநூற்று பிள்ளையார் கோவில் மேலத்தெரு அருள்மிகு காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயத்தில், 21.07.2026 அன்று சைவ சமயத்தின் நால்வர் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஆடு சுவாதி பெருவிழாவின் நிகழ்வாக சிறப்பு மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது.விழாவையொட்டி பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசித்து இறையருள் பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவனடியார்கள் சிறப்பாக மேற்கொண்டனர். இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்