மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருச்சிற்றம்பலம் தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட கவுரவ தலைவர் ராஜா, கவுரவ செயலர் ஆசிரியத்தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரேஷன் கடை மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தை மறுபரி சீலனை செய்ய வேண்டும். | இடங்களில் வசிப்பவர்களுக் கும், அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர்களுக்கும் பொருட்கள் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது.எனவே, தற்காலிக பணியா ளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட நிர்வாகிகள் கணேசன், பாரூக் அலி, மதியழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.