மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளி யில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது.
மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வீரராகவன் குழந்தைகளுக்குப் பாட புத்தகங்களை வழங்கினார். மதுரை கிழக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாதேவியும் நிகழ்வில் பங்கேற்றுக் குழந்தைகளுக்கு பாட நூல்களை வழங்கினார்.
முன்னதாக பள்ளிக் குழந்தைகளை தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்தும், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், ரோஜாப்பூக்களை கொடுத்தும் முகமலர்ச்சியுடன் வரவேற்றனர்.
குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு வருகை தந்தனர். குழந்தைகளுக்குப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட அரசின் விலை இல்லாப் பொருட்கள் பள்ளி திறந்த அன்றே வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாலா, மோசஸ், மெர்சி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் செய்திருந்தனர்.