தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் கால்நடை சந்தையில் விறுவிறுப்பு; நாட்டுமாடு ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை.
குண்டடம் அருகே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆடு, மாடு, கோழி விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற கால்நடை சந்தையில் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.
சந்தைக்கு செவலை பசு மாடுகள் இளங்கன்றுகள், ஜெர்சி இன மாடுகள் உள்ளிட்ட மொத்தம் 800 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
காலை முதலே விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர் இடையே விலை பேச்சுவார்த்தை நடைபெற்று சந்தை விறுவிறுப்பாக காணப்பட்டது. பல்வேறு இன மாடுகள் விற்பனையான நிலையில், நாட்டுமாடு ஒன்று அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது.
சந்தையில் கால்நடைகளின் வரத்து கணிசமாக இருந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.