டாஸ்மார்க் கடை மூட வேண்டும். கடை முற்றுகை. திடீர் மறியல். போலீஸ் குவிப்பு.


தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் உள்ள மதுபான கடையால் அப்பகுதியில் பொதுமக்கள் வீடுகளில் குடி இருக்க முடியவில்லை மது அருந்துவர்களின் தொல்லை அதிகமாக உள்ளது

மேலும் டாஸ்மார்க் கடை அருகில் பள்ளிக்கூடமும் கோவிலும் உள்ளது. மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு காளி பாடலை குடியிருப்பு பகுதிக்குள் தூக்கி எறிகின்றனர் என்று பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் திடீரென்று செல்வ விநாயகபுரம் மெயின் ரோட்டில் முதலில் மறியலில் ஈடுபட்டனர் அதன் பின்பு டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி வந்தனர்

இதனை அடுத்து கலால் தாசில்தார் மணிராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது ஒரு வார கால அவகாசம் வேண்டும் டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு என்று தாசில்தார் மணிராஜ் பொதுமக்களிடம் கூறினார் ஆனால் அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை இந்த கடையால் எங்களுக்கு கடும் பாதிப்பு உள்ளது

இன்றே மூட வேண்டும் என்று பொதுமக்கள் கூறி திடீரென்று மீண்டும் ரோட்டில் கற்கள் மற்றும் கட்டைகளை டோட்டல் போட்டு திடீரென்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி பொறுப்பு செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டது. அப்பகுதியில் மீண்டும் பதட்டம் பரபரப்பு நிலவியது காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்கள்

ஆனால் பொதுமக்கள் நாங்கள் படும் வேதனை கொஞ்சம் நெஞ்சம் இல்லை நிரந்தரமாக இந்த கடை மூடினால் மட்டும்தான் நாங்கள் இப்பகுதியில் குடியிருக்க முடியும் இல்லையென்றால் மது அருந்திவிட்டு வருபவர்களின் தொல்லை அதிகமாகவே உள்ளது என்று தொடர்ந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன் பின்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்த அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது இது பற்றி போராட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் வசந்தகுமார் கூறுகையில் இந்த டாஸ்மாக் கடை பள்ளிக்கூடத்துக்கும் கோவிலுக்கும் அருகிலேயே உள்ளது மேலும் மது அருந்தி விட்டு செல்லுபவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செல்கின்றன சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை குறிப்பாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளன புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து தான் இன்று பொதுமக்களுடன் சேர்ந்து நானும் சாலை மறியலில் ஈடுபட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன் இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக செல்வநாயகபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வரை போராட்டம் நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் வசந்தகுமார் கூறினார்.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில் இந்த டாஸ்மார்க் கடையால் தினசரி நாங்கள் வேதனைப்பட்டு வருகிறோம் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை நாங்கள் கடைகளுக்கும் செல்ல முடியவில்லை மது அருந்திவிட்டு மது பாட்டலை வீட்டிற்குள் தூக்கி எறிகின்றனர்.

இதனால் எங்களுக்கு வேறு வழி இன்றி செல்வநாயகபுரத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை கண்டிப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பெண்கள் கூறுகின்றனர். தொடர்ந்து செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் போலீஸ் குவிக்கப்பட்டு பதட்டம் பரபரப்பு நிலவி வருகிறது படையை நிரந்தரமாக மூடும் வரை கடையை விட்டு நாங்கள் செல்ல மாட்டோம் என்று பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *