தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே இரண்டு ஆண்டுகளாக எந்தவித அனுமதியும் இல்லாமல் கறி தொட்டி ஆலை இயங்கியதால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது விவசாயிகள் தொடர்ந்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கன்னிவாடி வருவாய் துறைக்கு உட்பட்டு அரிக்கான் மலத்தில் இரண்டு ஆண்டுகளாக கறி தொட்டியாலை இயங்கி வந்துள்ளது தேங்காய் தொட்டியை வைத்து கறி தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பும் தொழிலில் ஈடுபட்ட நபர் காவல்துறை மற்றும் வருவாய் துறை எந்த வித அனுமதியும் இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேங்காய் தொட்டியை எரித்து அதில் வரும் கறியை ஏற்றுமதி செய்துள்ளார் அப்பொழுது தண்ணீர் விட்டு அளிக்கும் பொழுது அந்த கறியானது நிலத்தடி நீரில் மாசுபடைந்து அனைத்து கிணற்றுகளிலும் கறி கருப்பு நிறத்தில் தண்ணீர் உள்ளதால் விவசாயம் குடிநீர் பாதிப்படைந்துள்ளது
அந்தப் பகுதி மக்கள் பலமுறை வருவாய் துறை அதிகாரிகளுக்கும் போலீசார் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் பல மனுக்களை அழித்தும் அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் தொடர்ந்து அவர் தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கன்னிவாடி வருவாய் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இதில் அப்பொழுது சரியான பதில் கிடைக்காததால் கன்னிவாடி தாராபுரம் கரூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கறி தொட்டியை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அப்பொழுது காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவாய்த்துறை அதிகாரிகளே வரவைத்து உடனே தீர்வு காணப்படும் சாலை மறியலை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல மணி நேரம் காத்திருந்து தாராபுரம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேசி அரிக்கான் பலத்தில் உள்ள கறி தொட்டி ஆலைக்கு சென்று முறையான அனுமதி இருக்கிறதா எவ்வாறு கறி தொட்டி நடத்துகிறீர்கள் என்ற கேள்வி கேட்டு உடனே எந்தவித அனுமதி இல்லை என்றால் மூடிவிடுங்கள் அனுமதி இல்லை என்பது அனைத்து பகுதிகளிலும் கரிய ஆலைகளை மூடி உள்ளார்கள் நீங்கள் தொடர்ந்து கறி ஆலையை நடத்தி வருகிறீர்கள்.

இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனவே கறி தொட்டி ஆலைகளை அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளை வர வைத்துள்ள அவர்கள் வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார் இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் செல்வகுமார் செய்தியாளரும் தெரிவிக்கையில் பலமுறை அதிகாரிகளுக்கு கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிப்படைந்துள்ளது கால்நடை குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் உள்ள எனவே இந்த கறி தொட்டி ஆலய அப்புறப்படுத்தவில்லை என்றால் இந்த ஆலையை தொடர்ந்து எடுக்கும் வரை எங்களது போராட்டத் தொடரும் என்று தெரிவித்தார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *