செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 26
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை நலத்திட்ட உதவிகள் கொடுத்து வெற்றியை கொண்டாடிய மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்
உலகம் முழுவதிலும் கடந்த 23ஆம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை செங்குன்றம் ராதா மூவி பார்க் திரையரங்கம் முன்பு திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான எம்.எல்.விஜய் பிரபு 10க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பகுதி நகர கிளை கழக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.