செங்கல்பட்டு மாவட்டம் நாளை மாலை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று
பதவி ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் தலைமையில் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், திருப்போரூர், ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தவெக காவில் இணையும் விழா நடைபெற உள்ளது.
அதற்கான வரவேற்பு விளம்பர பேனர்கள் மாமண்டூர் முதல் மதுராந்தகம் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வைக்கப்பட்டது. இதனை நேற்று மர்ம நபர்கள் மரகதம் குமரவேல் புகைப்படத்தை மட்டும் கிழித்தனர்.
இதனால் அங்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு பேனர்களும் கிழிக்கப்பட்டது. இதனால் விளம்பர பேனர்கள் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இணைப்பு விழா விளம்பர பேனர்கள்கிழிப்பு குறித்து படாளம் போலீசார் தீவிர
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.