திருவொற்றியூர். ஜூன். 14

திருவொற்றியூர் சென்னை மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் மண்டல குழு கூட்டம் தலைவர் தி.மு. தனியரசு தலைமையில் நடைபெற்றது.


இதில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாவட்ட உறுப்பினர்கள் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் , காங்கிரஸ், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு 148 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மண்டல கூட்டம் வாக்குவாதங்களுடன் முடிவடைந்தது.
கூட்டம் முடிவடைந்த பிறகு திடீரென தனது ஆதரவாளர்களுடன் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மண்டல அலுவலகத்தில் உள்ளே வந்து முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் புகை படத்தினை மண்டல அலுவலகத்தில் வைத்திருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை உடனடியாக அப்புற படுத்த வேண்டும் என்று அதிகாரியிடம் தெரிவித்தார்.

இதில் தவெக கட்சி ஆதரவாளர் மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் எம் எஸ் திரவியம் உடன் மண்டல அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் வந்து மண்டல உதவி ஆணையர் பத்மனாபனிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து புகை படத்தினை அப்புற படுத்தினால் தான் வெளியே செல்வோம் என்று அலுவலக அரங்கிலேயே காத்துக் கிடந்தார் .


பின்னர் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியரை அழைத்து வந்து முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை அப்புறப்படுத்தினர் இந்த நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக போடப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறகு கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *