நாகப்பட்டினம்,ஜூன்.15-
நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தானம் முகாம் நடைப்பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை குருதி மையம் மற்றும் குட் வெல் பவுண்டேசன் சார்பில் நடைப்பெற்ற கல்லூரி முதல்வர் காயத்ரி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் எம்எல்ஏ டி.லதா தொடங்கி வைத்தார். முகாமில் பெண்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் பங்கேற்று இரத்த தானம் அளித்தனர்.

கொடுக்கப்பட்ட இரத்தம் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டது. இரத்தம் வழங்கிய கொடையாளர்களுக்கு எம்எல்ஏ லதா சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இதில் குருதி மைய மருத்துவ அலுவலர் குணசேகரன், உதவி பேராசிரியர் ரகுபதி, வழக்கறிஞர் விஜயராகவன், தலைமை செயல் இயக்குனர் ஜாகிர் உசேன், உதவி பேராசிரியர் யோக பெத் ஜோனா, குருதி மைய ஆய்வக நிபுணர் கவியரசன் மற்றும் குருதி மைய அரசு செவிலியர்கள், குருதி மைய அலுவலர்கள், குட்வெல் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், ரத்ததான கொடையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குட் வெல் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஜெயபிரகாஷ் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *