கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முத்துகுமரன், கரூர் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, கரூர் உழவர் சந்தை மற்றும் தோரணக்கல்பட்டியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தையும் ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.