தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது தாராபுரம் நகராட்சி 15-வது வார்டு கவுன்சிலருமான சரஸ்வதி ராஜேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் தலைமையில் அவர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சரஸ்வதி ராஜேந்திரனுடன் திமுகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மேலும், திமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தாராபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.