சென்னை எண்ணூர் நேதாஜி நகர் எட்டாவது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த தென்னை மரத்தில் காற்றாடி நூலில் சிக்கிய ஒரு காகம் நீண்ட நேரம் உயிருக்கு போராடி வருவதாக எண்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில்
எண்ணூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து 3 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாடியில் இருந்து நீண்ட கொம்பின் உதவியுடன் நூலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காகத்தை மீட்டு காகத்தின் மீது சிக்கி இருந்த மாஞ்சா நூலை பத்திரமாக அப்புறப்படுத்தி காகத்திற்கு தண்ணீர் கொடுத்து உயிரை காப்பாற்றி பின்னர் அதனை பறக்க விட்டனர் இதனால் அந்த காகம் சிறு காயங்களுடன் உயிர் தப்பியது இதனை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி நன்றி தெரிவித்தனர்