திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இந்த திருமணத் தீம் கொண்ட சிறப்பு கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலரும், பிரிக்கால் நிறுவனத்தின் தலைவருமான வனிதா மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
திருமண நிகழ்வுகளை முன்னிட்டு மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஜூன் 15 மற்றும் 16 என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது..
இதில்,காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், பனாரஸ் சேலைகள், பந்தினி பைதானி, படோலா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட புடவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், திருமணத்திற்குத் தேவையான உயர்தர பட்டுப் புடவைகள், சிறப்பு வடிவமைப்பு சேலைகள் மற்றும் பிரத்தியேக நெசவு ஆடைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்தை முன்னிட்டு ஆடைத் தேர்வை எளிதாக்கும் நோக்கில் இந்த கண்காட்சியை நடத்துவதாகவும், குறிப்பாக பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நெசவுக் கலைகளை பிரதிபலிக்கும் புடவைகள்,மற்றும் கல்யாண வைபவங்களுக்கு பிரத்யேக டிசைன்களுடன் கூடிய புடவைகள் இங்கு காட்சி படுத்தி விற்பனை செய்யப்படுவதாக பிரேமம் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்வர்ணமுகி ரகுபதி தெரிவித்தார்..
காலை 10 மணி துவங்கி இரவு எட்டு மணி வரை கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடதக்கது..