கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் நடைபெற்ற கரூர் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நிறைவடைந்தன ஆண்கள் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில் அமைந்துள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 43 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தின.
அதைத் தொடர்ந்து, பெண்கள் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி கரூர் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இதில் 8 பெண்கள் அணிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.போட்டியின் மேற்பார்வையாளராக திருச்சி மாவட்ட கபடி கழக செயலாளர் வெங்கடசுப்பு வழிநடத்தினார்,சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற கூடுதல் காவல் ஆணையர் மனோகரன்வீரர்களை ஊக்குவித்தார்.
கரூர் மாவட்ட கபடி கழகத் தலைவர் சி.பி. அன்புநாதன் வீரர்கள்,நடுவர்கள் மற்றும் இந்நிகழ்வில் போக்குவரத்து கழக விளையாட்டு வீரர் சகாதேவன், இந்திய கபடி வீரர் சுந்தரராஜன்,அகில இந்திய கபடி வீரர் கோதை மணிமாறன், நல்லாசிரியர் விருது பெற்ற வி.பி. செல்வராஜ்,சர்வதேச தடகள வீரர் நல் வீரப்பன், தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த கபடி வீரர் சக்திவேல்,கொசூரைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கரூர் மாவட்ட கபடி கழக சேர்மன் தண்டபாணி மற்றும் செயலாளர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கொங்கு கல்லூரி கரூர் (KCK) அணிக்கும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சேரன் உடற்கல்வியியல் கல்லூரி அணிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.