நாகப்பட்டினம்,ஆக.31-
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் புறாக்கிராமம் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் கலந்து கொண்டு கோ-கோ விளையாட்டில் மாணவிகள் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், மாணவர்கள் 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் முதல் பரிசு பெற்றனர்.

அதேபோல் கைப்பந்து போட்டியில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடமும் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர். ஆண்கள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர். எறிபந்து போட்டியில் மாணவிகள் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்றனர். வளைய பந்து போட்டியில் மாணவர்கள் 14, 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடமும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

சதுரங்க போட்டியில் முதலிடம் 2 மாணவர்களும், இரண்டாம் இடம் 1 மாணவரும், மூன்றாம் இடம் 3 மாணவர்களும் பிடித்தனர். டேக்வாண்டோ போட்டியில் 4 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். அதேபோல் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் 92 பதக்கங்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பசுபதி தலைமையிலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிமுன் அன்சாரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரியர்கள் வித்யா, முருகானந்தம் ஆகியோரையும் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *