கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிறுவனத்தை சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் திறந்து வைத்து ஆசி வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நிறுவனத்தின் தொடக்கத்தை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிறுவனர்கள் மதன் மற்றும் செல்வம் முருகன், கார்த்திக் ஆகியோர் சேர்ந்து “பொதுமக்களுக்கு தரமான மளிகை பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவையில் வேறு எங்கும் கிடைக்காத வகையில் பல்வேறு மளிகை பொருட்கள் இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும், “திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் அவர் கூறினார்.
இந்த புதிய மளிகை விற்பனை நிலையம் கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.