மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத்-தோவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கிராமப் பொதுமக்கள், பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊர் மக்கள் சார்பில் முதல் பரிசாக ரூபாய் 5000, த்தினை மாணவி லட்சுமி, பெற்றுக் கொண்டார். இரண்டாம் பரிசாக – ரூபாய் 4000,த்தினைபூர்ணிமா பெற்றுக்கொண்டார்.
மூன்றாம் பரிசாக – 3000 த்தினை லட்சுமி, பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து பள்ளியின் சார்பில் இந்த மூவருக்கும் கேடயமும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் (100%. தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களுக்கும் கேடயம் வழங்கு கௌரவிக்கப்பட்டது.
இதில் கிராம பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள்சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.