​கோவை:
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும், அவர் அமைத்த “சிங்கப்பெண்கள் அதிரடிப்படைக்கு” நன்றி செலுத்தும் விதமாகவும் கோவையைச் சேர்ந்த பிரபல குறுங்கலைஞர் யு.எம்.டி. ராஜா ஒரு வித்தியாசமான சாதனையைப் படைத்துள்ளார்.


​கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர், பேனா, பென்சில், வண்ணம் என எந்தவொரு வழக்கமான ஓவியப் பொருட்களையும் பயன்படுத்தாமல், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த ஓவியத்தை வடிவமைத்துள்ளார். ஒரு மீன் தொட்டியின் கண்ணாடியில் இயற்கையாகப் படிந்திருந்த பச்சை நிறப் பாசியை மட்டுமே மூலப்பொருளாக எடுத்துக் கொண்டு, ஒரு சிறிய பிளேடு மற்றும் கத்தியின் உதவியால் பாசியை நுணுக்கமாகச் செதுக்கியுள்ளார்.


​அதில், “பாச தளபதி” விஜய் அவர்களின் தத்ரூபமான முக அமைப்பையும், அவருக்குப் பின்னால் கம்பீரமாக நிற்கும் சிங்கத்தின் உருவத்தையும், “சிங்கப்பெண்கள்” அதிரடிப்படையினரின் வடிவத்தையும் மிக நேர்த்தியாகச் செதுக்கி அசத்தியுள்ளார். எவ்வித ரசாயனமும் இன்றி, இயற்கையான பாசியில் பிளேடு கொண்டு மட்டுமே செதுக்கப்பட்ட இந்த அரிய “பாசி ஓவியம்” தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், காண்போரைக் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *