தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் வேங்கி பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு.
குண்டடம் அருகே,அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதியில் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர்-தாராபுரம் நெடுஞ்சாலை, வேங்கிபாளையம் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், சாலையைக் கடக்க முயன்ற புள்ளிமான் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியத்தில், தூக்கி வீசப்பட்ட புள்ளிமான் துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து குண்டடம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தகவலறிந்து வந்த காங்கயம் வனத்துறை அலுவலர்கள் இறந்த மானின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர். வாகனம் மோதி மான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.