கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கை எழில் கொஞ்சம் வகையில் உள்ளது இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவியில் குறிப்பதற்காக வருவார்கள்.

மேலும் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடவும் வருவார்கள் அவ்வாறு வரும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய துணிகள் மற்றும் பிற பொருட்களை சுருளி ஆற்றங்கரையில் விட்டுச் செல்கின்றனர் இதனால் புனித மிகுந்த சுருளி ஆற்று பகுதிகளில் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி கிடந்தன எனவே சுருளி அருவி கதிர்களில் கிடக்கும் குப்பைகள் துணிகளை அகற்ற வேண்டும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல் ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் கோரிக்கை வைத்தனர்

இந்த கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ ஜெகநாதன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் 2 பொக்லைன் எந்திரங்கள் 2 டிராக்டர்களுடன் சுருளி அருவி பகுதிக்கு வந்து அருவி பகுதி மற்றும் சுருளி ஆற்று பகுதிகளில் குப்பைகள் மற்றும் துணிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர் குறிப்பாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்யும் பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அங்கு வரும் பொதுமக்கள் அமர்ந்து தர்ப்பணம் போன்ற சடங்குகள் ஆற்றுப்பகுதியில் அமர்ந்து செய்ய ஏதுவான சூழலை ஏற்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ கூறும் போது சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இயற்கையை அழிக்க நமது உயர் நீதிமன்றம் கூறியது போல அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பொருட்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வனப்பகுதிகளில் வீசும் போது இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் எனவே பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் சுருளி அருவிக்கு கட்டணமின்றி செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது அதற்காக தான் நாங்களும் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகிறோம் என்றார் இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *