மதுரையில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி 1,200 கிலோ பறிமுதல்!
கடைக்கு சீல் வைப்பு; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மோகிஷன் என்பவர் 30வருடங்களாக சில்லறை மற்றும் மொத்த ஆட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையில் உள்ள பெரிய, சிறிய உணவகங்களுக்கு ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சமீப காலமாக மதுரையில் உள்ள சாலையோர உணவகங்களில் அசைவ உணவு அருந்திய சிலர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர்
இந்நிலையில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மொத்த மோகிஷன் இறைச்சி கடையில் கெட்டுப் போன இறைச்சி விற்பனை செய்வதாகஉணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென கடையில் சோதனை மேற் கொண்டனர்.
கடையில் கெட்டுப் போன ஆட்டு இறைச்சி மற்றும் ஊசி சிரின்ஞ் மூலமாக இறைச்சியில் தண்ணீர் ஏற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது.
தண்ணீர் இறைச்சியில் ஏற்றுவதற்காக ஏராளமான (ஊசி) கண்டு பிடிக்கப் பட்டது.
இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு கடையில் இருந்த கெட்டுப்போன 1,200 கிலோ ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர். அதோடு இறைச்சி கடையபூட்டி சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை தொடர் நடவடிக்கை அதிகாரிகள் எடுப்பதாக தெரிவித்தனர்.