திருவாரூர்., ஜூன். 17
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே செருகுடி பகுதியை சேர்ந்தவர் சத்தியா(32). கடந்த 2017ல் காவலர் பயிற்சி முடித்த இவர், தற்போது பேரளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது கணவர் மயிலாடுதுறை கிளியனூரை சேர்ந்த பிரேம்குமார் தனியார் பேருந்து நடத்துனர்.
இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒரு மாத காலத்திற்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்த பிறகு, அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஊழியர் விக்னேஷ் (30) என்பவர் வீட்டிற்கு சென்ற சத்தியா, திடீரென உடலில் தீவைத்துக்கொண்டுள்ளார். இதனால் தீக்காயத்துடன் அலறி தவித்தவரை காப்பற்ற முயன்ற விக்னேஷிற்கும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவாரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேரளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்த வந்த நிலையில், இரவு நேரத்தில் எதற்காக ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டிற்கு பெண் போலீஸ் செல்ல வேண்டும் , அங்கு எதற்கு தீ குளிக்க வேண்டும், ஒருவேளை பெண் போலீசுக்கும் ஜெராக்ஸ் கடைக்காரருக்கும் வேறு ஏதேனும் உறவு இருந்திருக்குமோ..? அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் தீக்குளித்தனரா..? இதன் காரணமாகத்தான் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனரா. .? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் போலீசே தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.