உதயநிதி கைதை கண்டித்து துறையூரில் நகர, மேற்கு ஒன்றிய திமுகவினர் சாலை மறியல்

துறையூர் ஆக-04
திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து துறையூரில் நகர மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தவெக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சையில் 03/08/2026 அன்று நடைபெற்ற விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறி காவல்துறையினர் உதயநிதியை கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் துறையூரில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இந்த மறியலில் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், கலை இலக்கிய பேரவை மாவட்டத் தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர்மன்ற தலைவர் செல்வராணி,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வர்த்தக அணி தர்ஷினி திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், மதியழகன், நகர துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட பிரதிநிதிகள் குமார், ரெங்கநாதபுரம் கார்த்திக், அசோக்ராஜ், முத்தியம்பாளையம் முன்னாள் தலைவர் சண்முகம், வீரமச்சான்பட்டி முன்னாள் தலைவர் காவேரி கணேசன், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார், காளிப்பட்டி சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் சுதாகர், டைலர் சீனிவாசன், வழக்கறிஞர் சுந்தர ஆதித்தன், சரண்ராஜ்,ஐடி விங் சேகர், கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, மோகன், நல்லுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரோந்து காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஏற்ப்பட்டது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *