திருவாரூர்., ஜூன். 17

திருவாரூர் நகரின் மையப் பகுதியான விஜயபுரம் கடைத்தெரு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டது. நகைக்கடை தெரு, காய்கறி மற்றும் மளிகை கடை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள இந்த உயர் மின் விளக்கில் இருந்து வெளிவரும் வெளிச்சம் அந்த பகுதி மக்களின் வசதிக்காகவும் வாகன ஓட்டின் வசதிக்காகவும் பெரும் உதவியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த மின்விளக்கு சரிவர எரியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மின்விளக்கு கோபுரம் கடந்த சில நாட்களாக மது பிரியர்களின் மதுபானம் வைக்கும் இடமாக மாறி வருகிறது. குறிப்பாக மின்விளக்கு கோபுரத்தின் அடியில் மின் விளக்கை எரிய ஸ்விட்ச் போடும் பகுதியில் மதுபானங்களை குடித்து விட்டு பாட்டில்களை மது பிரியர்கள் வைத்து விட்டு செல்கின்றனர்.

மேலும் இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளதால் அங்கேயே அமர்ந்து மது பிரியர்கள் அப்பகுதியை மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். இந்த இடத்தின் அருகிலேயே மசூதி ஒன்றும் உள்ளது. இதனால் மசூதிக்கு வரும் இஸ்லாமியர்கள் மது பிரியர்களின் அட்டகாசத்திறால் துன்புற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *