கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ;
​வளாகத்தில் நின்று இருந்த சொகுசு கார்கள், இடைத்தரகர்களின் வாகனங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர வேட்டை !!!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

​தற்போது ஆர்.டி.ஓ அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில்களைப் பூட்டி, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு உள்ள அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு கார்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது லஞ்சப் பணத்தை வாகனங்களில் மறைத்து வைத்து உள்ளனரா ? என்ற கோணத்தில் இந்த அதிரடி வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுவதால், கோவை அரசு அதிகாரிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *