கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நிரந்தர சம்பளம் வழங்கப்படாமல் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினையில் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு நிர்ணயத்தை ஊதியம் மற்றும் பொருத்தமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.