சர்வதேச யோகா தின விழா வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி

துறையூர் ஜீன் -21
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) பள்ளி சார்பில் துறையூரில் 19/06/2026 அன்று காலை 10 மணியளவில் சர்வதேச யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சர்வதேச யோகா தினத்தை (ஜூன் -21) முன்னிட்டு துறையூரில் வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) பள்ளி சார்பில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகிக்க,பள்ளி முதல்வர் பானுமதி தலைமையில் சர்வதேச யோகா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துறையூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் யோகாசணத்தின் சிறப்புகளையும்,பயன்களையும் பள்ளி மாணவர்களிடையே எடுத்துரைத்து பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணி பாலக்கரை பிரசன்னா மஹால் முன்பு துவங்கி பாலக்கரை , திருச்சி ரோடு, பேருந்து நிலையம் வழியாக முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா வரை சென்று நிறைவு பெற்றது.இந்த பேரணியின் மூலம் யோகாவின் அவசியம் மற்றும் உடல் நலம், மனநல நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இப்பேரணியில் சுமார் 370 பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு யோகா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

நிறைவில் பள்ளி மாணவர்களின் வித விதமான யோகா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களின் யோகா கலைத்திறனை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் சிறப்பாக செய்து இருந்தார்.இந்த பேரணியில் உதவி காவல் ஆய்வாளர் தினேஷ், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ஸ்டீபன்,ரோந்து காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *