மன்னார்குடி. ஜூன். 20
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியார் தலைப்பில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் வடிநிலக் கோட்டகம் மேற்பார்வையில் இயக்கும் அணை (சட்ரஸ் )அமைந்துள்ளது.

இந்த இயக்க அணையின் வலது கரையில் மேல் புறத்தில் 200 மீட்டர் அளவு தூரத்தில் கரை சேதமடைந்து சிறுக சிறுக எடுத்து இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இதனால் தட்டாங்கோவில் இருந்து திருராமேஸ்வரம் வரை செல்லும் சாலை நாளுக்கு நாள் குறுகி வருவதாக அந்தப்பகுதியில் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக திருராமேஸ்வரம், கோட்டாகச்சேரி, மணக்கரை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான் கோட்டூர் திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் மன்னார்குடி தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

இப்போதும் கரை சேதமடைந்து சாலை குறுகியதால் கவனம் சிதறும் பட்சத்தில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக அச்சுத்துடன் சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த குறுகிய சாலையில் வாகன ஓட்டிகள் சிலர் தங்களது வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் முள்ளியாறு கரையில் நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் சுற்றி மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் கனமழை பெய்யும் போது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்டூர் அணையை திறப்பதற்கு முன் முள்ளியாறு இயக்கு அணையின் வலது கரையின் மேல் புறத்தில் சேதமடைந்துள்ள கரையை பகுதிகளை சீரமைக்க வேண்டும் அதேபோல் விபத்துக்கள் ஏற்படாத வகையில் மொழியாற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் தடுப்பது சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *