அலங்காநல்லூர்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி
கிராமத்தில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஏ. குழந்தைகள் காப்பகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வடக்கு வட்டாரத் தலைவர்காந்தி,தலைமை வகித்தார் சிறப்புஅழைப்பாளராகஓபிசிஅணிமாவட்ட வழக்கறிஞர்பிரிவு நித்தியபிரியா,கலந்துகொண்டு காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து ராகுல்காந்தி நீடூடி வாழ காப்பகத்தில் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.


இதில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜெயமணி,தெற்கு வட்டாரத் தலைவர் சுப்பாராயல்,
தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் சைமன்,மனித உரிமை மாவட்ட தலைவர்முத்து, வடக்கு மாவட்ட சிறுபான்மையின் பிரிவு விமல்,மதுரை மாவட்டம் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார்,நகரத் தலைவர்கள் வைரமணி, சசிகுமார்,மற்றும் முருகன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில்குழந்தைகள் காப்பக மேலாளர் பிரியா,நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *