செங்குன்றம் செய்தியாளர்
ஜீன். 26
ஆவடி காவல் ஆணையரக கமிஷனரின் உத்தரவின் பேரில்,செங்குன்றம் காவல் மாவட்ட பால்பண்ணை காவல் நிலைய பகுதியில்போதை பொருள்களை தடுக்க ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் ட்ரக்ஸ் என்ற விழிப்புணர்வு நடைப் பேரணி நடைபெற்றது.
இதனை ஆவடி காவல் இணை ஆணையர் சிவகுமார், மற்றும் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலாஜி மணலி உதவி ஆணையாளர் விவேக்கண்ணன் பால்பண்ணை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். போதை பழக்கத்திலிருந்து விடுபட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்கள், பங்கேற்று ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் ட்ரக்ஸ் என எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பால் பண்ணை மாத்தூர்கேட் வழியாக மணலி சிபிசிஎல் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை ஓடினார்கள்.
இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் நிலைய போலீசார்கள் உடன் இருந்தனர்.