தென்காசி ஜூன் – 26

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில்  “Start Run, Stop Drug,  Anti-Drug Run-2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மரு.கலைகதிரவன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங்.இ.ஆ.ப.அவர்கள் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசு போதை பொருட்கள் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை இல்லா தமிழ்நாடு” என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில்  “Start Run, Stop Drug,  Anti-Drug Run-2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு ஓட்டம் குத்துக்கல்வலசை பகுதியிலிருந்து துவங்கி கணக்கப்பிள்ளை வலசை வரை சென்று மீண்டும் குத்துக்கல்வலசை ஆரம்பப் பகுதிக்கு வந்தடையும். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதையில் பாதை மாறாதே , போதை சாவின் பாதை, போதைப் பொருட்களை ஒழிப்போம் மனித மாண்பை காப்போம், புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும், போதைப் பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு போன்ற பதாதைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

போதைப் பழக்கத்தினால் “மனித ஆற்றலை மழுங்கடித்து, தனிமனிதனின் உடல்நலனையும், குடும்பத்தின் அமைதியையும், சமூகத்தின் வளர்ச்சியையும் சீர்குலைக்கும் போதைப் பொருட்களுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதையில்லா தென்காசி மாவட்டமாக மாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.திரு.ரஞ்ஜீத்சிங். தெரிவித்தார்
பின்னர் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்றுக் கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  தண்டபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட சுகாதார அலுவலர்                      மரு. கோவிந்தன், காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) முருகேசன், உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) .கனகம்மாள்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் திரு.அலெக்ஸ் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *