தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக கொளத்தூர், பூம்புகார் நகரில் உள்ள கபாலீஸ்வரர் கல்லூரியில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சென்னை வடக்கு மாவட்டம் ஆர். முருகன் மற்றும் நிலைய அலுவலர் எஸ்.ரமேஷ் தலைமையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்வில் தீ விபத்து ஏற்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும், வீட்டில் சமையல் அறையில் கேஸ் சிலிண்டரின் மீது தீ பரவும் நேரத்தில் அதனை எவ்வாறு தடுத்து அணைப்பது என்பது குறித்தும் விபத்து நேரிட்டால் அதிலிருந்து மீட்ட நபரை எவ்வாறு முதலுதவி செய்து காப்பாற்ற வேண்டும் மற்றும் சிறிய தீ விபத்துக்கள் முதல் பெரிய தீ விபத்தில் வரை ஏற்படும் போது அதிலிருந்து எவ்வாறு நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும், உயரமான பத்து மாடி கொண்ட குடியிருப்பில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் கல்லூரி மாணவிகளுக்கு, செயல்முறை விளக்கமாக தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர்..

இதில் கல்லூரியின் முதல்வர் லலிதா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு தீ விபத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை கேட்டறிந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *