தேனி மாவட்டம், கம்பம்:

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என். இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி இணைச் செயலாளர் ஆர். வசந்தன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்று சிறப்புரையாற்றினர். அவர்கள் மாணவிகளுக்கு கல்வி வாழ்வில் சிறப்பாக முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.


இவ்விழாவின் இறுதியில் கல்லூரி பேரவை உறுப்பினர் சபகத் சபீனா நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *