பாலமேடு
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீப ஆராதனை நடந்தது.தொடர்ந்து கோ பூஜை,கோவில் முன்பு சக்தி கொடி ஏற்றுதல்,உலக மக்கள் நன்மை வேண்டி சங்கல்பம் செய்து கலச விளக்கு வேள்வி பூஜையும் நடந்தது.
பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.