திருச்சி, ஜூன் 30– திருச்சி மாவட்டத்தில் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாம் தினமும் காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும். முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி, நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மண்னை
க.மாரிமுத்து.