அலங்காநல்லூர் ஜூலை 01-
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பாறைக் கருப்பு சுவாமி, முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பால்குடம் எடுத்தல் அங்கப் பிரதட்சனம் கிடாய்வெட்டுதல் அக்கினி சட்டி எடுததல் சிலா குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர்
தொடர்ந்து பாறைக்கருப்பு சுவாமிக்கும் முத்தாலம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் தீபாராதனைகள் பூஜைகள் நடந்தது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும்மேளதாளம் முழங்க சர்வ அலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி பூஞ்சோலை சென்று இருப்பிடம் சேர்ந்தது பின்னர் மஞ்சள் நீர் சாற்று முறையுடன் 3 நாள்திருவிழா நிறைவு பெற்றது
இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்கள் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை பாறைக்கல் தெரு உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.