அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை தலைவர் அபிஷேக் திங்வி அவர்களின் ஒப்புதலுடனும், மதுரை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் அவர்களின் பரிந்துரையின்படியும், மனித உரிமைத் துறை மாநில தலைவர் ஜெயசிம்மா அவர்கள், சின்னஇலந்தைகுளம் ஜெயமணியை மதுரை வடக்கு மாவட்ட மனித உரிமைத் துறையின் மாவட்ட தலைவராக நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சின்னஇலந்தைகுளம் ஜெயமணிக்கு கைத்தறி ஆடை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மனித உரிமை சார்ந்த பொதுமக்கள் நலப் பணிகளிலும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், மனித உரிமைத் துறை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *